4542. அற்புத ஜோதி மருந்து - எல்லாம்
ஆகியன் றாகி அமர்ந்த மருந்து
தற்பதம் தந்த மருந்து - எங்கும்
தானேதா னாகித் தனித்த மருந்து. ஞான
உரை: “எல்லாமாய் அல்லதுமாய் இருந்தது” எனச் சான்றோர் பரம்பொருளைக் குறித்தல் மரபாதலின், “எல்லாமாகி யல்லதுமாய் அமர்ந்த மருந்து” என்று கூறுகின்றார். தற்பதம் - தனது பரமாம் பதம். எல்லாப் பொருளிலும் கலந்திருப்பினும் தன்னையொன்றும் கலத்தல் இல்லாததாகலின், சிவ பரம்பொருளைத் “தானே தானாகித் தனித்த மருந்து” என்று விளக்குகின்றார். (25)
|