4543. தன்னை அளித்த மருந்து - என்றும்
சாகாத நல்வரம் தந்த மருந்து
பொன்னடி ஈந்த மருந்து - அருட்
போனகம் தந்த புனித மருந்து. ஞான
உரை: சிவானந்தத்தைத் தருவது பற்றித் “தன்னை அளித்த மருந்து” என்கிறார். “தந்த நுன்றன்னைக் கொண்ட தென்றன்னை” என மணிவாசகர் மொழிகின்றது காண்க. அருட் போனகம் - திருவருள் ஞானமாகிய அமுதம். (26)
|