4544.

     கண்ணுக் கினிய மருந்து - என்றன்
          கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து
     எண்ணுக் கடங்கா மருந்து - என்னை
          ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து. ஞான

உரை:

     கைப்பொருள் - கைகண்ட மருந்து. எண்ணுக் கடங்கா மருந்து - எண்ணத்தின் எல்லைக் கப்பாற்பட்ட மருந்து. ஏதக் குழி - துன்பமாகிய குழி.

     (27)