4549.

     ஆறாறுக் கப்பால் மருந்து - அதற்
          கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து
     ஈறாதி யில்லா மருந்து - என்னை
          எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து. ஞான

உரை:

     ஆறாறு - முப்பத்தாறாகிய தத்துவம். அப்புறத்து ஈராறு - தலைக்கு மேலதாகிய பன்னிரண்டங்குல யோகாந்தத் தரிசன வெளி. ஈறாதி - கேடும் தோற்றமும்.

     (32)