4550. ஆரணத் தோங்கு மருந்து - அருள்
ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
காரணம் காட்டு மருந்து - எல்லாம்
கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து. ஞான
உரை: ஆரணத் தோங்கும் மருந்து - வேதங்களால் புகழ்ந்தோதப்படும் மருந்து. ஆகமப் பொருளாய் இன்புறுத்தும் இயல்பினதென்றற்கு, “ஆகமமாகி அண்ணிக்கும் மருந்து” என வுரைக்கின்றார். உள்கொண்ட மருந்து - உள்ளத்தில் இடம் கொண்டிருக்கும் மருந்து. (33)
|