79. சிவசிவ ஜோதி

சிந்து

    அஃதாவது, சிவ பரம்பொருளாகிய பேரருட் சோதியை, உவகை யுற்று உள்ளக்கிளர்ச்சியுடன் பாடுதலாம்.

பல்லவி

4552.

     சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
          சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
     சிவசிவ சிவசிவ ஜோதி.

உரை:

     சிவமாகிய அருட் சோதி ஆண்டவனை நினைந்து நாவால் ஓதிப் பராவுகின்றார். சிவத்தைத் திருவருள் ஒளிவடிவில் நினைந்தோதும் இயல்பு விளங்க, “சிவசிவ சோதி” என்று பாடுகின்றார்.

     (1)