4555. சின்மய மாம்பெருஞ் சோதி - அருட்
செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
உரை: சின்மயமாம் சோதி - ஞானமயமாகிய சோதி. அருட் செல்வம் - திருவருள் ஞானமாகிய செல்வம். தன்மயமாய் நிறை சோதி - தனிப்பெரும் சிவமாய் ஆன்மாவில் நிறைந்தருளும் சோதி. யானும். சித்துருவாய்ச் சிவபோகம் துய்க்கும் இயல்புடையவன் என்பதை எனக்குணர்த்திய ஞானப்பொருள் என்பார், “என்னைத் தந்த மெய்ச்சோதி” என விளம்புகின்றார். சதானந்த சோதி - நிலைத்த இன்பம் தரும் சோதி. (4)
|