4557.

     மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
          வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
     துன்னிய வச்சிர ஜோதி - முத்து
          ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. சிவசிவ

உரை:

     பொன் வண்ண சோதி - பொன்னிறம் கொண்ட சோதியாகிய சிவன். சுக வண்ணத்த தாம் பெருமாணிக்க சோதி - இன்ப மயமானதாய்ப் பெரிய மாணிக்க மணியின் சிவந்த ஒளியையுடைய சோதிப் பொருள். துன்னிய வச்சிர சோதி - திண்ணிய வயிரமணியின் நிறத்தையுடைய சோதி. மரகத சோதி - பசுமையான மரகத மணியின் ஒளியையுடைய சோதி.

     (6)