4559.

     ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
          தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
     பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றும்
          பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. சிவசிவ

உரை:

     ஐம்புலம் - இப் பொறிகளிடமாகத் தங்குகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தும் புலமாம். மலர்தல் - விரிந்து நிற்றல். பொய்ம்மயல் - பொய்யுணர்வு தோற்றுவிக்கும் மயக்கமாகிய குற்றம்.

     (8)