4564. தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி. சிவசிவ
உரை: தத்துவம் முப்பத்தாறும் தாத்துவிகம் அறுபதும் சேரப் பொருந்தும் தத்துவம் தொண்ணூற்றாறையும் படைத்தருளுவது பற்றி, சிவனை, “அந்தத் தத்துவமெல்லாம் தருவிக்கும் சோதி” என்றும், தத்துவ ஞானமும் திருவருள் ஞானத்தாற் பெறலாவதென்றற்கு,“எல்லாம் அருளில் விளங்க அமர்த்திய சோதி” என்றும் இசைக்கின்றார். (13)
|