4566.

     ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
          கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
     வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
          வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. சிவசிவ

உரை:

      ஆறந்தம் - யோகாந்தம், கலாந்தம், முதலாகவுள்ள அறுவகை அந்தங்கள். வீறும் பெருவெளி - தனக்கு மேல் ஒன்றுமில்லாத பரசிவவெளி. சிவவெளியின் தனிச் சிறப்பை, “வெட்ட வெளி” என்று குறிக்கின்றார்.

     (15)