4567. பேரருட் சோதியுள் ஜோதி - அண்ட
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
வாரமுற் றோங்கிய ஜோதி - மன
வாக்குக் கெட்டாததோர் மாமணி ஜோதி. சிவசிவ
உரை: பெரியவாகிய அண்டங்களிலும் சிறியவாகிய பிண்டங்களிலும் கலந்தொளிரும் இயல்பு விளங்க, “அண்ட பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய சோதி” என்று பாடுகின்றார்.
வாரம் - அன்பு. மாமணி - பெரிய சிவமாகிய மணி. (16)
|