4568.

     ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
          ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
     என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
          என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி. சிவசிவ

உரை:

     சிவபரஞ்சோதி வேறே சோதி யில்லாமை பற்றி, “ஒன்றான பூரண சோதி” எனவுரைக்கின்றார். ஒன்றாத வுள்ளம் - பொருந்தாத மனம். என்றா ஒளிர்கின்ற சோதி - சூரியனாய் விளங்குகின்ற சோதி. என்று - சூரியன், இது சிவசூரியன் எனவுணர்க.

     (17)