4569. மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
துய்ய சிவானந்த ஜோதி - குரு
துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. சிவசிவ
உரை: வேதாந்த வீடு - வேத ஞானிகள் உரைக்கின்ற வீடு பேறு. துய்ய சிவானந்தம் - தூய சிவபோக வின்பம். துரியத்தலம் - சுத்தாவத்தையில் கூறப்படும் துரிய நிலையம். (18)
|