4574. சுகமய மாகிய ஜோதி - எல்லா
ஜோதியு மான சொரூபஉட் ஜோதி
அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி
தானந்த ஜோதி சாதானந்த ஜோதி. சிவசிவ
உரை: சுக மயம் - ஞான வின்ப மயம். சொரூப உட்சோதி - உண்மை யுருவாய் உள்ளத்தில் ஒளிரும் சோதி. அகமிதம் - அறிய மாட்டாமை; இஃது அகமியம் எனவும் வழங்கும். சதானந்தம் - மெய்யான இன்பம். (23)
|