4575.

     நித்த பரானந்த ஜோதி - சுத்த
          நிரதிச யானந்த நித்திய ஜோதி
     அத்துவி தானந்த ஜோதி - எல்லா
          ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. சிவசிவ

உரை:

     நித்த பரானந்த சோதி - கெடாத மேலான ஆனந்தத்தை நல்கும் சிவசோதி. சுத்த நிரதிசயானந்த நித்தியசோதி - தூயதாய்த் தன்னின் மேம்பட்ட தொன்றுமில்லாததாய்ப் பொன்றாத இன்பத்தையுடையதாகிய சோதி. சிவத்தோடு அத்துவிதமாய்ப் பெறும் இன்பம் “அத்துவிதானந்தம்” என்று அறிக.

     (24)