4576.

     பொய்யாத புண்ணியம் ஜோதி - எல்லாப்
          பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி
     நையா தருள்செய்த ஜோதி - ஒரு
          நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஜோதி. சிவசிவ

உரை:

     பொய்யாத புண்ணியம், கெடாத சிவபுண்ணியம். ஏனைப் பசுபாச புண்ணியங்கள் பயன் தந்து கெடுவன என அறிக. புணர்த்திய சோதி - ஞானத்தை நல்கிய சோதி. நைதல் - தேய்தல். நண்ணிய சோதி - கலந்த சோதி.

     (25)