4577.

     கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
          கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
     எண்ணிற்ப டாப்பெருஞ் ஜோதி - நான்
          எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. சிவசிவ

உரை:

     உளக்கண் உயிர்க்கண் அருட் கண்ணுமாம் சோதி - மன வுணர்வாகிய கண்ணிற்கும் உயிரறிவாகிய கண்ணிற்கும் அறிவாய் ஒளிரும் அருள் ஞானக் கண். எண்ணிற் படாத சோதி - எண்ணத்தின் எல்லைக்குள் அகப்படாத சிவசோதி.

     (26)