4579.

     தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
          தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
     நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
          நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. சிவசிவ

உரை:

     சிவத்தின் கலப்பின்றி ஒரு பொருளும் இல்லையாதலால், “தானன்றி ஒன்றிலா சோதி” என்றும், சீவனாகிய தன்னைத் தன்னுட் பொதிந்து தன்மயமாக்குதல், “என்னைத் தன்மயமாக்கிய சோதி” என்றும் இயம்புகின்றார். சத்திய சோதி - மெய்ம்மையான சோதி, நல்கிய சோதி - அருள் ஞானம் தந்தருளிய சோதி.

     (28)