4581.

     அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
          ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
     இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
          கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. சிவசிவ

உரை:

     அம்பல சோதி - அம்பலத்தின்கண் எழுந்தருளும் சோதி. இச்சை - விரும்புவன. உயிரின்கண் சிவமிருக்கும் நிலையை, “உயிர்க்கு இங்குமங் கென்னாமல் எங்குமாம் சோதி” எனவுரைக்கின்றார்.

     (30)