4584.

     சுத்த சிவமய ஜோதி - என்னை
          ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
     சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
          தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. சிவசிவ

உரை:

     எங்கும் எல்லாப் பொருளினும் கலந்திருக்கும் கலப்பின்றித் தனித்தோங்கும் நிலை, “சுத்த சிவமயம்” எனப்படுகிறது. திருவருட் சிவஞானம் “சோதி மணிமுடி” என்று உருவகம் செய்யப்பட்டுளது. நான் சிவமயமாகுமாறு ஞான மருளினான் என்பாராய், “நானே தானாகி ஆளத் தயவு செய் சோதி” எனப் புகல்கின்றார்.

     (33)