4588. சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: சொல் வந்த அந்தங்கள் - சொற்களால் விளங்க வுரைக்கப்படும் வேதாந்தம் சித்தாந்தம் முதலாக வரும் ஆறு அந்தங்கள். ஒரு சொல் - உபதேச மொழியொன்றினால். வீறுதல் - மேம்படுதல். (4)
|