4589. தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: தம் கோல் - தமது சிவஞானமாகிய அளவுகோல். விகற்ப வுணர்வுக்கு இடமில்லாத சமரச நோக்குடைய உண்மைச் சன்மார்க்க நீதி நெறியே செவ்விய அளவுகோல் என்பது கருத்து. (5)
|