4590. ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: மல மாயை கன்மங்களால் விளையும் மறைப்பை “ஆபத்து” என்று கூறுகின்றார்; உலகியல் மாயை என்பதும் உண்டு. அவியாமல் - கெடாமல். தீபம் - சிவஞானமாகிய திருவிளக்கு. (6)
|