4591.

     மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
          விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
     செய்யென்று தந்தது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     மெய் யொன்று சன்மார்க்கம் - மெய்ந்நெறியாவது சன்மார்க்கமேதான். மெய்த்தொழில் - நிலையாய செயல்வகை.

     (7)