4592.

     என்பால் வருபவர்க் கின்றே - அருள்
          ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
     தென்பால் இருந்தது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     அருள் ஈகின்றேன் - திருவருட் சிவஞானத்தைத் தருகின்றேன், அடுக்கு, வற்புறுத்தற் பொருட்டு. தென்பால் இருந்தது - கயிலையில் தென்பால் கல்லாலின் கீழ்த் தட்சிணா மூர்த்தமாய் எழுந்தருளியது.

     (8)