4594. பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: பரை - பரனது அருட் சத்தி. தூக்கிய திருவடியே ஆதி பராசத்தி என்பதாம். திருவடிக்கு மேல் மேல் என்று காட்டியருளுவது “திரை தூக்கிக் காட்டுதல்” என்று தெரிவிக்கின்றார். (10)
|