4595. தற்பர மேவடி வாகி - அது
தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: தற்பரமே வடிவு - தனக்குத்தானே பரம் என்ற திருவுருவம். உருவத்துக்கு அப்பாலதாகிய பரஞான சொரூபம், “உருவாகிச் சிற்பரத்துள்ளது” எனக் குறிக்கப்படுகிறது. சிற்பரத்தைச் சேக்கிழார், “சிற்பர வியோமம்” என்று குறித்தருளுவர். (11)
|