4596.

     நவவெளி நால்வகை யாதி - ஒரு
          நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
     சிவவெளி யாம்இது பாரீர் -திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     உருவம் நான்கும் அருவம் நான்கும் அருவுருவம் ஒன்றும் ஆக ஒன்பதிற்குரிய வெளி நவவெளியாம். உருவவெளி நான்கிற்கும் அருவ வெளி நான்கிற்கும் நடுவனதாகிய சாதாக்கிய வெளி நடுவெளி. அதுவே சிவவெளி; அதனை “நடுவெளிக்குள்ளே நடத்திய நீதிச் சிவவெளி” என மொழிகின்றார்.

     (12)