4597.

     மேருவெற் புச்சியின் பாலே - நின்று
          விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
     சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     மேரு வெற்பு - மேருமலை; இது புருவ நடுவாகிய இலாடத்தானம் என்பதும் உண்டு. தம்பம் - உபசாந்தத் தூண்.

     (13)