4598.
ஆரண வீதிக் கடையும் - சுத்த ஆகம வீதிகள் அந்தக் கடையும் சேர நடுக்கடை பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை:
ஆரண வீதி - வேத நெறி. ஆகம வீதி - சிவாகமங்கள் காட்டும் நெறி. வேதாந்த சித்தாந்தங்களின் நடுவில் உள்ள நாதாந்த நிலை. (14)
(14)