4599. பாடல் மறைகளோர் கோடி - அருட்
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: கோடி - எண்ணிறந்தவை. மறைகள் அனந்தமெனக் கந்தபுராணம் கூறுவதால், “பாடல் மறைகள் ஓர் கோடி” என உரைக்கின்றார். இவற்றால் அருளுருவாகிய திருவடியும் ஏனை உருவங்களாகிய அயன், அரி, உருத்திரன் முதலியோரும் பாடித் தேடுகின்றன என்பது குறிப்பு. (15)
|