4600. நீடு சிவாகமங் கோடி - அருள்
நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: சிவாகமங்கள் இருபத்தெட்டு எனப்படினும் உபாகமங்களாய் மிகப் பலவுண்மையின், “நீடு சிவாகமம் கோடி” என்கின்றார். வேதங்களைப் போலச் சிவாகமங்களும் சிவத்தைத் தேடுகின்றன என்பது கருத்து. (16)
|