4601.

     பத்தி நெறியில் செழித்ே­த - அன்பில்
          பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
     தித்தித் திருப்பது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     பத்தி நெறி - இறைவன் பொருள் சேர் புகழை நினைந்தோதி வழிபட்டொழுகல். இதனை ஞான நெறியெனவும் கூறுவர். செழித்தல் - வளமுறல், பத்திநெறியால் அன்பு சிறந்து இறைவன் புகழ்பாடும் பெருமக்களை “அன்பிற் பாடும் மெய்யன்பர்” என விளம்புகின்றார். மெய்யன்பர் பதி - மெய்த் தொண்டர்கள் இடமாக.

     (17)