4603.

     தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
          சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
     திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     தரும் நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த சன்மார்க்கம், ஞானமும் இன்பமும் நல்கும் நெறிகள் அனைத்தையும் தனக்குள் கொண்டிருக்கும் சுத்த சன்மார்க்கம். சன்மார்க்கமே மெய்ம்மை நெறி என்றற்கு, “ஓங்கும் திருநெறி” என்று தெரிவிக்கின்றார்.

     (19)