4604.

     எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
          எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
     செம்பொருள் என்பது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     சமயங்கள் தோறும் உட்பிரிவுகள் பலவாதலின் அவற்றைச் சேர்ந்தவர் பலரும் அடங்க, “எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும்” எனக் கூறுகின்றார். செம்பொருள் - மெய்யான பரம்பொருள்.

     (20)