4605.

     சைவ முதலாக நாட்டும் - பல
          சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
     தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     சைவம் முதலாக நாட்டும் சமயங்கள் - சைவம், வைணவம், வைதிகம், சமணம், பவுத்தம், இஸ்லாம், கிறித்தவம் முதலிய சமயங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைப் பரம்பொருள் என்று கூறுதலால், “தனித்தனிக் காட்டும் தெய்வம்” என்று கூறுகின்றார்.

     (21)