4607. எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: எத்தாலும் - எதனாலும்; “எத்தால் மறவாதே நினைக்கின்றேன்” (வெண்) என்று சுந்தரமூர்த்திகள் கூறுவது காண்க. சிவத்தின் திருவருளால் செத்தவரை எழுப்புதல் கூடும் என்றற்குச் “செத்தாரை மீட்பது பாரீர்” என வுரைக்கின்றார். செத்தாரை மீட்ட வரலாறுகள் பல புராணங்கள் உரைப்பது காண்க. (23)
|