4610.

     பாரிடம் வானிட மற்றும் - இடம்
          பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
     சேரிட மாம்இது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     பாரிடம் - நிலவுலகம். சீவன் முத்தர்களும் சித்துக்களைச் செய்யவல்ல சித்தர்களும் முடிவில் சேருமிடம் சிவபரம்பொருள் என்பாராய், “முற்றும் சேரிடமாம் இது பாரீர்” என மொழிகின்றார்.

     (26)