4612. உருவும் உணர்வும்செய் நன்றி -அறி
உளமும் எனக்கே உதவிய தன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: உரு - மக்களுரு. செய்நன்றி யறியுளம் - உய்தி பெறற்குரிய கருவி கரணங்களும் வாழ்வும் அருளிய இறைவனுடைய நன்றியை மறவாத மனம். திரு - திருவருள் ஞானம். நன்றியை நினைந்த வழி மனத்தின்கண் யன்பு பெருகும் என அறிக. (28)
|