4686. மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
உரை: பெருமை பொருந்திய ஞான சபையின்கண் அருட் பெருஞ் சோதியாகிய ஆண்டவனைக் கண்டு கொண்டதால் நான் மனமகிழ்ச்சியுற்று அந்த மனத்தின்கண் படிந்திருந்த உலகியல் மாயையைப் போக்கிக் கொண்டேன்; மாநில வாழ்வில் நிலவும் கோபம் காமம் என்ற குற்றங்களிலிருந்து நீங்கினேன்; எல்லாம் செய்ய வல்ல அறிவாற்றலும் பெற்றேன்; நல்லோர் இனத்தைச் சூழ்விக்கும் சுத்த சன்மார்க்கப் பெருநெறியை அடைந்துள்ளேன்; இனி எனக்குக் குறை யாதுமில்லை. எ.று.
மனவுணர்வை மறைக்கின்ற உலகியல் வாழ்வின் ஆசையை “மனமாயை” என்று குறிக்கின்றார். நிலவுலக வாழ்வு விளைவிக்கும் கோபம் காமம் என்ற குற்றங்களினின்றும் நீங்கினேன் என்பாராய், “மாநிலத்தே சினமொடும் காமமும் தீர்ந்தேன்” என்று தெரிவிக்கின்றார். எல்லாம் செயவல்ல ஆற்றல் அருள் ஞானத்தால் எய்துவதாதலால், “எலாம் வல்ல சித்தும் பெற்றேன்” என்று செப்புகின்றார். நல்லன்பர் கூட்டத்தை மிகுவிப்பதாதலால், “இனம் மிகும் சுத்த சன்மார்க்கப் பெருநெறி” என்று சிறப்பிக்கின்றார். கனம் மிகும் மன்று - பெருமை மிகுந்த ஞான (4)
|