4702. சேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
உரை: சிவமே பொருளென்று தேர்ந்து தெளிந்து உள்ளத்தே உணர்ந்து கொண்டேனாதலால் திருவருள் ஞானமாகிய அமுதத்தை உண்டு சிற்றம்பலத்தில் எழுந்தருளும் எல்லாம் வல்ல கூத்தப் பெருமானை அடைந்தேன்; அதனால் அவனருளால் எங்கள் இனத்தில் யான் எல்லாம் வல்லவனாயினேன்; சிற்றம்பலவன் எல்லாம் வல்ல பெருமானாதலால் அவனைச் சார்ந்ததின் பயனாக அவன் அருள் பெற்று எல்லாம் வல்லவனாயினேன் என்பது கருத்து. எம்பலம் - எங்கள் சன்மார்க்க இனம. (7)
|