4707. கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
யோகாதி சமயங்கள் உரைக்க உலப்புறாதே.
உரை: சுற்றத்தார் கூடியிருந்து கூகா என்று கதறி யழுது எடுக்காதபடி கொடியவனாகிய எனக்குச் சாவா வரத்தைத் தந்தருளிய கருணைச் செல்வத் தந்தையாகிய நின் மேற் பெருங் காதலன்புடையனாய் இவ்வுலகில் வாழ்கின்றேன்; யான் செய்த யோகச் செய்கைகளையும் அதிசயங்களையும் சொல்ல முடியாது காண். எ.று.
இறந்தவர்களைச் சுற்றத்தார் கூடியிருந்து கோவெனக் கதறி ஈமத்துக்கு எடுத்தேகுவது வழக்கமாதலின், “கூகா எனக் கூடி எடாது” என இயம்புகின்றார். கொடுமைகள் பல செய்தவன் என்றற்குக் “கொடியனேன்” என்று கூறுகின்றார். எண்வகை யோகச் செயல்களையும் அற்புதச் செய்கைகளையும் தொகுத்து, “யோகாதிசயங்கள்” என வுரைக்கின்றார். உலப்புறுதல் - முடிதல். யோகாதிசயம் ஒவ்வொன்றும் உலப்புறாது என (2)
|