4821.

          ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
          ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
          போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
          போற்றும் படிப்பெற்ற போது.

உரை:

     ஞானிகளான பெரியோர் போற்றுகின்ற சிற்றம்பலத்திலும் பொன்னம்பலத்திலும் திகழ்கின்ற இறைவனுடைய திருநடனத்தைக் கண்டு பராவும் பேறு பெற்றபோது கீழ்மை எல்லாம் நீங்கின; குற்றமெல்லாம் நம்மை விட்டு ஒழிந்தன; இன்ப வகைகள் எல்லாம் நமக்கு உண்டாயின என அறிக. எ.று.

     ஈனம் - கீழ்மை. ஊனம் - குற்றம். ஈனங்கள் குணஞ் செயல்களாலும் ஊனங்கள் மனம் வாக்கு காயங்களாலும் உண்டாவன வாதலால் இரண்டையும் பிரித்தோதுகின்றார். சிற்றம்பலம் - ஞான சபை. ஞானிகள் மனனம் செய்து போற்றுவதாதலின், “ஞானமுளோர் போற்றும் சிற்றம்பலம்” என்று சிறப்பிக்கின்றார். பொன்னம்பலம் - பொன் வேய்ந்த சபை. இதன்கண் எத்திறத்தோரும் தம்மில் வேற்றுமையின்றி நின்று பரவும் இடமாதலின், பொதுவகையில் “பொன்னம்பலம்” என்று புகழ்கின்றார். போற்றும் பேறு போற்றும்படி என

     (4)