4826.

          ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன்
          பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத்
          தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர்
          மொழிஆடு தற்கு முனம்.

உரை:

     பொய்ம்மை நிறைந்த அடியவனாகிய என்னுடைய குற்றங்களை மன்னித்தருளி உலகத்தில் அழிவின்றிச் செழித்தோங்கும் தனது அருள் வடிவத்தை நான் கண்டு ஒரு சொல் சொல்லுதற்கு முன்பே தலைவனாகிய சிவபெருமான் காட்சி தந்தருளிய வியத்தகு செயலை என்னென்று சொல்லுவேன். எ.று.

     நான் ஓர் மொழி ஆடுதற்கு முனம் ஓங்கு அருள் வடிவத்தை எனக்கு ஈந்த அதிசயத்தை என்புகல்வேன் என இயைக்க. பொய் முதலிய குற்றமுடையார்க்குத் தனது அருள் வடிவத்தைத் தருவதிலனாகவும் யான் பெறத் தந்தமையால் பொய் முதலிய என் குற்றங்களைப் பொறுத்தருளினான் என்பது கருத்து. அவனது அருள் வடிவம் நிலைபேறு உடையதாதலால் அதனை “வையத்து அழியாமல் ஓங்கும் அருள் வடிவம்” என்று

     (9)