4839.

     மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
          வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
     உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
          உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
     வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
          மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
     இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
          எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.

உரை:

     தெளிவின்றி மயங்கும் புத்தி எனப்படுகின்ற உலக வழக்கில் ஈடுபட்டு வருந்துகின்ற வழக்காடும் கரணமாகிய பயலே; உண்மை யுணர்வுக்குச் செல்லும் வழி இது, சேரும் துறை இது என்று அறியாமலும், செய்வகை இது என்று சிறிதும் தெரியாமலும், வருந்தி யாதாம் என விசாரித்தற் கறிதற்கு விரைந்தோடுகின்ற நீ உள்ளதனை அள்ளவாறு அறியும் திறம் அறியாமல் வருந்துகின்றாய்; வீணாக உழைக்கும் உழைப்பால் ஒரு பயனும் எய்தாது விளங்குகின்ற மனமென்னும் கரணம் அடங்கி ஒடுங்கியது போல நீயும் அடங்கி நிற்பாயாக; அடங்காவிடில் இமைப் பொழுதில் உன்னை அழித்து விடுவேன்; இது உண்மை காண்; எனக்குள் இனித்திருத்தற்கு உரிய நெறி அறியாய் போலும்; என்னை யார் என்று எண்ணுகின்றாய்; நான் எல்லாம் செய்ய வல்லவனாகிய சிவபெருமானுக்கு இனிய மகனாவேன் என அறிக. எ.று.

     மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்னும் கரணம் நான்கனுள் தெளிவுக்குரிய கரணம் புத்தி. இது சத்துவம், தாமதம், இராசதம் என்ற முக்குணங்களின் வயப்பட்டுத் திரியும் இயல்புடையதாதல் பற்றி, “மயங்கு புத்தி எனும் உலக வழக்காளிப் பயலே” என்று குறிக்கின்றார். உலக வழக்குகளில் உண்மை பொய்ம்மைகள் வந்து புகுவது நாளும் இயல்புடைமை பற்றிப் புத்தியை, “உலக வழக்காளி” என்று உரைக்கின்றார். உயங்குதல் - வருந்துதல். உண்மை யறிதற்கு ஆர்வமுற்று அலைவது பற்றி, “உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய்” என்று விளம்புகின்றார். திருவருளாலன்றி உண்மை உணரும் திறம் கைவராது என்றற்கு, “உணரும் உளவறியாய்” என்றும், திருவருளை நாடாது புத்தி ஒன்றையே துணையாகக்கொண்டு உழல்வது வீண் உழைப்பு என்பாராய், “வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என்பயனோ” என்றும் பகர்கின்றார். வாய்ம்மை - உண்மை. ஒருவரோடு கூடி இயங்க வேண்டுமாயின் அவருடைய இயல்புகளை முன்னம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உலகியல் உண்மையை நீ அறிந்திலையோ என்பாராய், “இயங்க என்னை அறியாயோ” என்று

     (6)