4898.

     துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
     இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
          எண்ணம் பலித்ததென்று உந்தீபற.

உரை:

     திருவருள் இன்பப் பேற்றிற்கு இரவிருளும் தூக்கமும் தடையாய்த் துன்பம் செய்தமை பற்றி, “துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது” என்றும், இவற்றின் தொலைவால் திருவடிப் பேற்றின் இன்பம் தமக்கு எய்திற்று என்பது புலப்பட, “இன்பம் கிடைத்தது” என்றும் இயம்புகின்றார். இன்பப் பேறே வள்ளலார்க்குக் குறிக்கோளாதலின், “எண்ணம் பலித்தது என்று உந்தீபற” என்று புகல்கின்றார்.

     (4)