4902. எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
உரை: சிவ பரம்பொருளின் ஞானத்தால் மனக்கவலை நீங்கினமை பற்றி, “தந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்” என்று இயம்புகின்றார். சித்திகள் - கன்ம யோக ஞானசித்திகள். (8)
|