4903.

     தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
     சிந்தை களித்தேன்என்று உந்தீபற
          சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.

உரை:

     அரிய செயல் பலவும் செய்ய வல்ல ஆற்றல்களைப் பெற்றமை விளங்க, “சித்தெலாம் வல்லேன்” என்று தெரிவிக்கின்றார்.

     (9)