4904. முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன்என்று உந்தீபற
சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.
உரை: இதன்கண் முத்தியை என்பது சீவன் முத்தி நிலையை. கன்ம யோகங்கள் புரியினும் சீவன் முத்தி நிலையில்தான் ஞான சித்தி கைவரப் பெறும் என்பதை உணர்த்துவதற்கு, “அம்முத்தியினால் ஞான சித்தியை உற்றேன்” என்று விளக்குகின்றார். (10)
|